தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும். மறுபடியும் தர்மம் வெல்லும் இந்த உலகில் ஊசி விழுவதற்கும் ஒரு காரணம் இருக்கும்போது... இதற்குக் காரணம் இல்லாமலா போய்விடும்? காத்திருங்கள்.... பார்த்திருங்கள் காலத்தின் பதில்களுடன் சந்திப்போம் .....
என்னடா இவன் ஒரு பைத்தியக்காரன் போல ...படங்களையும் வீடியோக்களையும் போட்டுத் தொலைச்சிருக்கிறானே... என்றா பார்க்கிறீர்கள்? இவையெல்லாம் வாழ்க்கையின் சிறிய இன்பங்கள் ... இதையும் அனுபவித்துப் பார்ப்போமே... நான் , எதிர்காலத்தின் தெளிவற்ற காட்சிகளை நம்பியோ .... இறந்த காலத்தின் கறைபட்ட தளும்புகளால்…
தூறிப் பெய்யும் மழையினிலே... தூர எறிக்கும் வெயிலினிலே... மாறிப் பிறக்கும் இரவினிலே... வாசம் கொடுக்கும் மலர்களிலே... வேறு எங்கும் காணாத விண்மீன் திரளின் வெளிச்சத்தில்... ஏறி நின்று பார்த்தாலும் எங்கும் தெரிவது நீ தானே.... மாயத் திரையின் விழிப் பரப்பில் வண்ணக் கனவின் ஒரு ஈர்ப்பில் தோயத் தொடங்கிய என்…
ஜூலை மாத நிலவுக்கு தெரியவில்லை நான் பரம ஏழை என்று... நாளை வரைக்கும் பொறுக்க முடியவில்லை நான் ஒரு கோழையன்று... என்னை உனக்காய் தந்து வாழ்வதால் ஒன்றும் இல்லை எனக்கு இன்று... உன்னை நினைத் தே உருகி சாவதால் எண்ணவில்லை வேறு ஒன்று...
நினைவில் நிஜத்தில் -உன் நிழல் விழும் இடத்தில் ... தொலைவில் அருகில் -உனைத் தொடர்ந்திடும் பொழுதில்... எனை நான் கொஞ்சம் இழந்திடும் வரைக்கும்... உனை என் நெஞ்சம் உயிரென உரைக்கும்.... இளமைச் சுவட்டில் -உன் இளவான் முகட்டில்... இதயம் நிலவென இலங்கிடும் அகத்தில்... அழகாய் பூத்த ஒரு மலரானாய்... அன்பில்…
தானாக நீர் வடியும் என் கண்களுடன் மரணம் வரைக்கும் காத்திருக்கிறேன்..... நீயோ வாழ்வின் தொடக்கத்தில் நிற்கிறாய்.... ஆனாலும் பரவாயில்லை.... என் மரணத்தை உன் வாழ்வின் தொடக்கமாக்கிககொள்.... முற்றுப்புள்ளி முடிவின் அறிகுறிதான் ஆனால்... அது இன்னொரு வாக்கியத்தின் தொடக்கம்... என் முடிவை தொடக்கமாக்கிககொள்....
இலங்கை,மாத்தளையில் அமைந்திருக்கும் அங்குனுமிட்டியாவத்த எனும் கிராமத்தின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு...! படங்களின் பாதியே இங்கு தெரிகின்றன.படங்களின் மேல் இரு தடவைகள் அழுத்த படங்களை முழுதாகப் பார்க்கலாம். புகைப்படங்களை எடுத்தனுப்பிய நண்பருக்கு நன்றி !
இனிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைப் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு ( இப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டவையல்ல. படத்தின் மீது இருமுறை அழுத்தப் படம் பெரிதாகக் காட்சியளிக்கும் ).